ஆவுடை நாயகி சமேத 1089
- அகத்தீஸ்வரர் கோவில்
- கோவிந்தாபுரம் கிராமம்
- நஞ்சுண்டாபுரம் (PO)
- தாராபுரம் வட்டம்
- திருப்பூர் மாவட்டம்
- தமிழ்நாடு - 638657
- வில்வ வனத்தில் உள்ளது
மூலவர்:
ஸ்ரீ ஆவுடை நாயகி சமேத அகத்தீஸ்வரர், ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பால முருகன், ஸ்ரீ நந்தி, ஸ்ரீ அண்ணாமலையார் (அகத்தீஸ்வரர் பாதம்), ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ மகா மேரு, 1089 அகத்தீஸ்வரர் நடராஜர் திருச்சபை(1089 சிறிய லிங்கம்).
இந்தக் கோவில் பல கிராமங்களுக்குச் சேர்ந்த பொதுக் கோவில் ஆகும்
வரலாறு
ஆதியில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் தென்னாடு வந்த நிலையில் இந்த திருக் கோவிலுக்கு வந்ததாகவும் ஆறு இருக்கும் திசை தெரியாத நிலையில் குழம்பி நின்ற போது முருகப் பெருமான் மாடு மேய்ப்பவராக வள்ளியுடன் காட்சி கொடுத்து தொழுவம் சென்றால் தொழுகை நடத்தலாம் என்று வழிகாட்டியாக வாய்வழி செய்தி உண்டு.அதற்கு சான்றாக வள்ளி முருகன் அகத்தியர் சம்பந்தம்மான கல்வெட்டு உள்ளது.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகா ஆத்ம ஞான சித்தர் ஸ்ரீ பகவான் திருமலைசாமி பல ஊருக்கு யாத்திரை வந்த நிலையில் இந்த ஊரின் இந்த இடத்தில் மண்ணை சர்க்கரையாக மாற்றி "மங்களம் பொங்கட்டும் "என்று கொடுத்ததாக வரலாறு.
இந்த ஊர் கிணற்றில் அரஹர என்று குதித்து பக்கத்து ஊரில் கோவிந்தா என்று எழுந்து வந்ததாக வாய் மொழி வரலாறு. ஆதியில் பெரிய ஊராக இருந்த இந்த நஞ்சுண்டாபுரம் தற்போது மிகச்சிறிய ஊராக உள்ளது. நஞ்சுண்டாபுரம் காளிபாளையம் என்று அழைக்கப்படுகிறது.
கோவிந்தாபுரம் பஞ்சாயத்தில் 1வது வார்டு ஆகும். கோவிந்தாபுரம் கிராமத்தில் இருந்து வடக்கே 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நஞ்சுண்டாபுரம். தாராபுரம் நகரிலிருந்து மேற்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது குருநாதர் கூற்றுப்படி 1089 ஊரில் இருந்து ஊருக்கு ஒரு சிவ லிங்கம் என்ற வகையில் இது வரை 1000 சிவலிங்கங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த கிராமத்திற்கு எந்த வித போக்குவரத்தும் இல்லை. ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட ஸ்தலம் என்பதால் ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் ஆகும் சிறப்பு பண்டிகைகள் வருடம் தோறும் சித்திரை 1ஆம் தேதி தீர்த்தம் எடுத்து வருவதும் அபிஷேகம் செய்வதும் நாள் முழுவதும் மகா அன்னதானமும் கடந்த 20 வருடங்களாக பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நடந்து வருகிறது ஆடி 18 தீர்த்த திருவிழா அன்று சிறப்பு அன்னதானமும் வருடம் வருடம் நடைபெற்று வருகிறது
- ஸ்ரீ ஆதி கால பைரவர் சன்னதி
- ஸ்ரீ மகா நவக்கிரக சன்னதி
- ஸ்ரீ மகா சகஸ்ர லிங்கம் உள்ளது
- 1089 ஸ்ரீ சக்ரம் அமைக்கப்பட்ட மகா பீடம்
- நாகருடன் கூடிய கன்னி மூல கணபதி
- 1000 சிவலிங்கங்கள் 20x20
- தண்ணிர் தொட்டி கட்டி அதில் வைக்கப்பட்டுள்ளன 200x200 அடி நீள அகலமுள்ள திருத்தலம் இது சுமார் 60 வில்வ மரங்களும் மற்றும் நூற்றுக்கணக்கான தெய்வீக மரங்களும் வளாகத்தில் உள்ளது நிலத்தடி நீர் (போர்வெல்)மூலம் கிடைக்கும் நீரை கொண்டு பராமரிக்கப்படுகிறது மும்முனை மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது
கடந்த 20 வருடங்களாக
"திருக் கார்த்திகை ஜோதி" தீபத் திருவிழாவும் அன்னதானமும் கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
"ஐப்பசி அன்னாபிஷேகமும்" வருடம் வருடம் சிறப்பாக நடந்து வருகிறது.
"மகா சிவராத்திரி" சிறப்பு அபிஷேகமும் அன்னதானமும் வருடம் வருடம் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சித்தர் பீட அறக்கட்டளை மூலம் மேற்கண்ட பணிகளை செய்து வரும் கு.திருமலைசாமி இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் சித்தர் மூலம் திருவோடு வாங்கி வந்ததில் இருந்து இன்று வரை திருக்கோயில் பூஜைகளையும் நிர்வாகமும் நடத்தி வருகிறார்.
ஜோதிடம் மூலம் வரும் வருமானத்தை வைத்து இது நாள் வரையிலும் திருப்பணி செய்து வருகிறார். "திண்டுக்கல் சாமி" என்று போற்றப்படும் குருநாதர் ஶ்ரீலஶ்ரீ ராமகிருஷ்ணர் அறிய ஆசைப்படி பிரபஞ்ச நன்மைக்காக இந்த திருக் கோவிலில் 1089 சிவ லிங்கம் உடல் உயிர் தத்துவம் படி அமைக்கப்படுகிறது சிகல ஜீவராசிகளுக்கும் இந்த பிரபஞ்ச சக்தியின் பூரண சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திருப்பணி நடை பெற்று வருகிறது இந்த திருப்பணியில் தாங்களும் இனைந்து பணியாற்றியட அன்புடன் அழைக்கின்றோம் .
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சித்தர் பீட டிரஸ்ட் -R.No/2006
12A 80G வரிவிலக்கு உண்டு
கனரா பேங்க்-8996201000013
IFSC -CNRB0008996
GPay No-6382661650
Office Number
G.THIRUMALAISWAMY
9543164359
6382661650
Office Assistant
Abinaya-8610986030
7402798228
சொல்லாமல் சொல்லி வைத்தார்
திருச்செந்தூர் வரை செல்ல வேண்டிய யாத்திரை திருச்சியுடன் முடிவடைந்தது அதன் பிறகு திருவண்ணாமலைக்கு மலையை சுற்றி உள் கிரி வலம் பாதையில் எலுமிச்சம்பழம் மாலை போடலாம் என்று குருநாதர் கூறினார் அதன்படி திருப்பூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கன்னிவாடி போன்ற ஊர்களை சேர்ந்த சிவன் அடியார்களை ஒருங்கிணைத்து சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட அடியார்கள் மூலம் திருவண்ணாமலை உள்கிரிவல பாதையில் மலை போடப்பட்டது. இரண்டு லாரி லோடு எலுமிச்சம் பழங்களை மாலையாக கோர்த்து 4 நாட்களில் மலையை சுற்றி சாற்றி வழிபடப்பட்டது கிரிவலப் பாதையில் விஸ்வ ரூப தரிசனம் இடத்தில் உள்ள ஆசிரமத்தில் உதவியுடன் நடந்தது மலை மேல் சென்று அந்த சமயத்தில் வந்த அடியார்கள் வசம் சித்தர் ஒருவர் தனது திருவோட்டை கொடுத்துள்ளார்.அதை அவர்கள் நமது குரு நாரதரிடம் கொடுக்க குருநாதர் அந்த திருவோட்டை எம்மிடம் வழங்கினார் இந்த திருவோடு அண்ணாமலையார் உங்களுக்கு கொடுத்தது இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். நாம் சிறுவனாக இருந்த போது இப்போதைய நமது கோவில் சிறிய கோவிலாக புற்று இருந்த கோவிலாக இருந்தது.இன்று இறைவன் கருணையால் குரு அருளால் வளர்ந்துள்ளது.
திரு அண்ணாமலையாரின் திருவோடு நஞ்சுண்டாபுரம் என்னும் நமது ஊருக்கு வரவேண்டும் என்பது அண்ணாமலையாரின் அருள் 1089 சிவலிங்கங்கள் அங்கு இடம் பெற வேண்டும் என்பதும் அண்ணாமலையாரின் ஆவல். திருவண்ணாமலைக்கு எலுமிச்சம்பழம் போட்டதால் தான் உங்களுக்கு திருவோடு கிடைத்தது. திருவோட்டை கொடுத்த நீங்கள் பாக்கியவான்கள்.அந்த நேரம் அந்த திருவோட்டை எனக்கு கொடுங்கள் என்று எவருமே கேட்கவில்லை.குருநாதர் சொன்ன ஒரு வார்த்தை "அண்ணாமலையாரின் இந்த திருவோட்டிற்கு தகுதியானவர் தாங்கள் மட்டுமே" என்று கூறியது அண்ணாமலையாரின் அந்த திருவோட்டை வைப்பதற்காக பழைய கோவிலின் அருகில் சிறிய சிவாலயம் அமைக்க உதவிய உள்ளுர் மக்களுக்கும் நன்றி கூறுவதோடு அச்சமயம் நடந்த கும்பாபிஷேகம் அற்புதமான விசயம். அதன் பிறகு நாம் கோவிலுக்கு கடன்கார்ன் ஆனதும் அந்தக் கடனை அடைக்க நாம் பட்ட அவமானமும் நல்ல அனுபவங்கள்.
கும்பாபிஷேகம் நடந்து 12வது நாள் குருநாதர் திருப்பூர் அடியார்கள் சூழ வருகை தந்து ஐந்து நாட்கள் தங்கி இருந்தார்.அப்பொழுது கூறியது தான் 1089 ஊரில் இருந்து ஊருக்கு ஒரு சிவ லிங்கம் தானம் பெற்று இந்த இடத்தில் வையுங்கள் அதுவே நாம் அண்ணாமலையார் திருவோட்டிற்கு செய்யும் நன்றி என்று கூறினார்.
இறைவனிடம் உத்தரவு கேட்டு திருப்பணியை துவங்கினோம். எத்தனையோ இடர்பாடுகள்... எத்தனையோ அவமானங்கள்.... எத்தனையோ கஷ்டங்கள்.... நூற்றுக்கும் மேற்பட்ட அடியார்கள் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த திருக் கோவில் திருப்பணிக்கு பழைய அடியார்கள் முடிந்த அளவு உதவி செய்தார்கள். இருநூறு சிவலிங்கம் செய்ய உதவினார்கள் திருக் கோவில் பீட வேலை செய்வதற்கு மிகப் பெரிய அளவில் உதவினார்கள் உள்ளூர் நண்பர்களும் பொது மக்களும் பெரிய அளவிற்கு உதவி செய்தனர்.
நமது குருநாதர் ஶ்ரீ ராமகிருஷ்ணர் 2017ஆம் ஆண்டு பகவான் கருணையால் ஜீவசமாதில் அமர்த்திய போது நமது கோவிலைப் பற்றிய எல்லா கனவுகளும் சிதைந்து போனது. ஏதோ காரணத்தால் நாம் தனித்து விடப்பட்டோம்(2013ம் முதல்) எமக்கு அகத்தியர் என்ற திருநாமத்தை சூட்டியிருந்த குருநாதர் விஸ்வாமித்திரர் என்ற திருநாமத்தை வைத்து 2013ம் ஆண்டு முதல் நமது திருக் கோவிலில் இருக்க வைத்து விட்டார். ஆனதும் குறையொன்றும் இல்லை நடக்க போகும் அனைத்தையையும் நம்மை நினைக்க வைத்து நடத்தியும் வைக்கிறார் குருநாதர். விரைவில் குருநாதர் ஆசைப்படி திருக் கோவில் அமையும்.
- குருநாதர் நமக்கு வேறு பணி இருப்பதாக கூறி வந்தார்.ஒரு சமயம் ஸ்ரீ காளஹஸ்தி முதல் திருச்செந்தூர் வரையில் பாத யாத்திரை செல்லலாம் என்று கூறினார் ஆனால் அவர் அதற்கு வைத்த கட்டுப்பாடுகள் மிகச் சுவாரஸ்யமானவை.
- 1.பணத்தை உபயோகப் படுத்திக் கூடாது நம் செலவிற்கு நாமும் பணம் வைத்துக் கொள்ள கூடாது வேறு யார் கொடுத்தாலும் வாங்கக் கூடாது.
- 2.பிச்சை எடுத்துத் தான் உண்ண வேண்டும் ஒரு வேலைக்கு ஒரு வீட்டில் தான் உண்ண வேண்டும்.
- 3.ஒரு நாளைக்கு ஒரு ஊரில் தான் தங்க வேண்டும்.
- 4.அடுத்த வேலைக்கு உண்டான உணவை கையில் எடுத்துச் செல்ல கூடாது.மூன்று நபர் மட்டுமே யாத்திரை செல்ல வேண்டும்.குருநாதர் நாம் முருகானந்தம் என்கிற மூவர் மட்டுமே பாத யாத்திரை சென்று வந்தோம்.
ஸ்ரீ காளஹஸ்தி முதல் திருச்சி ஸ்ரீ திருவானைக் கோவில் வரை 28 நாட்கள் பாத யாத்திரை வந்தோம்.எத்தனை முன் ஜென்மங்களில் நாம் செய்த புண்ணியமோ குருநாதர் நிறைய ஞான விசயங்களை கற்றுக்கொடுத்தார்.
உடல் உயிர் தத்துவபடி பஞ்ச பூதங்களும் நவக்கிரகங்களும் இணைந்து நடத்துவது தான் இந்த பிரபஞ்ச இயக்கம். அண்டத்தில் உள்ளதே இந்த பிண்டத்தில் உள்ளது என்பதை சித்தர்கள் தெளிவாக உணர்த்தி உள்ளனர். பிரபஞ்சத்தின் பூரண சக்தி கிடைக்கும் உயிரினால் ஊருக்கு அதிக குறைபாடுகள் வருவதில்லை. அவற்றிக்கு தேவையானவை கிடைத்து விடுகின்றன.ஆனால் பிரபஞ்சத்தின் பூரண சக்தி கிடைக்காத ஜீவ ராசிகள் பலவித துன்பங்களுக்கு ஆளாகின்றன இது இயற்கை.
இதை முழுமையாக உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் வழிபாட்டுத் தலங்களை(கோவில்களை) உருவாக்கி வைத்தனர். பிரெஞ்ச ஆற்றல் அந்த இடத்திற்கு முழுமையாக கிடைக்கும்படியும் அந்த இடத்திற்கு மனிதர்கள் சென்று வரும்போது அவர்களின் உடல், மனம் இவற்றிக்கு தேவையான ஒரு சக்தி கிடைக்கும்படி செய்துள்ளனர். இது அனுபவத்தில் அனைவரும் உணர்ந்த விசயம்.
நமது திருக்கோவில் இதே அடிப்படையில் சற்று வித்தியாசமாக 121 சிவ லிங்கம் ஒரு பீடமாக உருவாக்கப்படுகிறது. 121 சிவலிங்க பீடம் என்பது 9-3ன்பது பீடமாக உருவாக்கப்படுகிறது.
திருவண்ணாமலை போன்று சுற்றிலும் எட்டு பீடம் மத்தியில் ஒன்று என ஒன்பது பீடமாக உருவாக்கப்படுகிறது.அதற்கு போதிய இடம் நமது கோவில் வளாகத்தில் உள்ளது மாதிரி விளக்க படங்கள் மற்றும் வீடியோ இதில் இணைக்கப்பட்டுள்ளது. 8 பீடம் அமைக்க தேவையான சிவலிங்கங்கள் தற்சமயம் உள்ளன. பீடகற்கள் (11/2x11/2x11/2) தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1449 பீடகற்கள் தேவைப்படுகிறது மேலும் கோவில் கட்டுவதற்கும் பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் விருப்பம் உள்ள அடியார்கள் தங்களால் இயன்ற உதவிகளை பொது மக்கள் மற்றும் இறை அன்பர்கள் மூலம் திரட்டித் தருமாறு மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம். Read more